ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸின் இந்தியப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:30 pm
ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட சி 295 விமான ஆலையை வதோதராவில் பிரதமரும், ஸ்பெயின் அதிபரும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.சி-295 விமானத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 10:45 am
மேதகு பெட்ரோ சான்செஸ் அவர்களே, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, பாரதத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, ஸ்பெயின் மற்றும் மாநில அரசின் அமைச்சர்களே, ஏர்பஸ் மற்றும் டாடா குழுக்களின் அனைத்து உறுப்பினர்களே, தாய்மார்களே!குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸும் கூட்டாகத் திறந்து வைத்தனர்
October 28th, 10:30 am
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸும் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை இரு பிரதமர்களும் பார்வையிட்டனர்.பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்
October 26th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.