இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கூடிய தரங்கா ஹில்-அம்பாஜி-அபுசாலை புதிய ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 13th, 04:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தால் ரூ.2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள தரங்கா ஹில்-அம்பாஜி-அபுசாலை புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.