அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதீர்தா முகர்ஜிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 02nd, 10:01 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா முகர்ஜி, சுதீர்தா முகர்ஜி ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 20th, 10:05 am

ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:16 pm

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்

September 09th, 02:41 pm

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !

September 09th, 10:00 am

பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்