ஸ்வாமி ஆத்மஸ்தானந்தா ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 18th, 08:21 pm
“ஸ்வாமி ஆத்மஸ்தானந்தா ஜி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. என் வாழ்வில் மிக முக்கியமான கால கட்டத்தில் நான் அவருடன் வாழ்ந்தேன். ஆத்மஸ்தானந்தா ஜி ஆழ்ந்த அறிவும், ஞானமும் பெற்றிருந்தவர். அவருடைய முன்மாதிரியான பண்பியலை பல தலைமுறைகள் நினைவுகூறும். நான் எப்போது கொல்கத்தா சென்றாலும், ஸ்வாமி ஆத்மஸ்தானந்தா ஜி அவர்களின் ஆசிர்வாதத்தை நாடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.