ராஜஸ்தானின் சித்தோர்கரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 02nd, 11:58 am

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நேற்று, அக்டோபர் 1 ஆம் தேதி, ராஜஸ்தான் உள்பட முழுவதும் தூய்மையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி தொடங்கப்பட்டது. தூய்மை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய அனைத்து குடிமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

October 02nd, 11:41 am

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மெஹ்சானா - பதிண்டா - குர்தாஸ்பூர் எரிவாயு குழாய், அபு சாலையில் உள்ள எச்பிசிஎல் எல்பிஜி ஆலை, ரயில்வே மற்றும் சாலை திட்டங்கள், நாத்வாராவில் சுற்றுலா வசதிகள் மற்றும் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

அக்டோபர் 2ம் தேதி சித்தோர்கர் மற்றும் குவாலியருக்கு பிரதமர் பயணம்

October 01st, 11:39 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 அக்டோபர் 2 ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, ராஜஸ்தானின் சித்தோர்கரில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில் குவாலியர் செல்லும் பிரதமர் அங்கு சுமார் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.