ஸ்வாமி அவ்தேஷானந்த் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு பாராட்டு
May 15th, 04:08 pm
நர்மதா சேவா யாத்ராவில், ஸ்வாமி அவ்தேஷானந்த் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான், இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு பாராட்டு தெரிவித்தனர். அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகள், நாட்டை மாற்றி அமைக்கும் என்று கூறினர்.நர்மதா நதியை பாதுகாக்கும் யாகம் தொடங்கி விட்டது: பிரதமர் மோடி
May 15th, 02:39 pm
அமர்கண்டக்-ல் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா சேவா யாத்ரா வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இயக்கம் ஆகும். நர்மதா நதியை பாதுகாக்கும் யாகம் தொடங்கி விட்டது. ஸவச் பாரத் திட்டத்தை பற்றி விரிவாக பேசிய பிரதமர், வெற்றிகரமான சுத்தத்திற்கான உந்துதல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அல்ல, மக்கள் மேற்கொண்ட முயற்சியால் நிகழ்ந்தது என்றார்.மத்திய பிரதேசம், நர்மதா சேவா யாத்ரா நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
May 15th, 02:36 pm
நர்மதா சேவா யாத்ரா நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது இந்திய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த ஒரு மக்கள் இயக்கம் என்று குறிப்பிட்டார். நர்மதா நதி எதிர்கொண்ட அபாயங்களை உணர்ந்து, மத்திய பிரதேச அரசு நதியை பாதுகாக்க மேற்கொண்ட பணிகளை பாராட்டினார். 2022-ல், நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்டத்திற்குள், புதிய மேம்பாடு செயல்களுக்கு ஆர்வமுடன் மக்கள் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் வெளிப்படுகிறது
May 04th, 03:41 pm
434 நகரங்களிலும் டவுன்களிலும் நடத்தப்பட்ட ஸ்வச் சர்வேஷன்-2017-ல் இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் வெளிப்படுகிறது. ஸ்வச் சர்வேஷன் 2017 திறந்த வெளியில் மலம் கழிக்காத நகர்புற பகுதிகளை உருவாக்க மற்றும் நகராட்சி திட கழிவுப் பொருட்களை வீடு வீடாக சேகரித்து, செயல்முறைப்படுத்தி அகற்றுவதை மேம்படுத்துவதற்கு நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளின் அடிப்படையில் விளைவுகளை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது