Progress of the people,Progress by the people,Progress for the people is our Mantra for a Viksit Bharat: PM Modi
November 16th, 10:15 am
PM Modi addressed the Hindustan Times Leadership Summit 2024. The Prime Minister remarked that his Government had won back the trust of the people by ensuring the Mantra of Progress of the people, Progress by the people and Progress for the people. He added that the Government's aim was to build a new and developed India and the people of India had entrusted them with the capital of their trust.PM Modi addresses Hindustan Times Leadership Summit 2024 in New Delhi
November 16th, 10:00 am
PM Modi addressed the Hindustan Times Leadership Summit 2024. The Prime Minister remarked that his Government had won back the trust of the people by ensuring the Mantra of Progress of the people, Progress by the people and Progress for the people. He added that the Government's aim was to build a new and developed India and the people of India had entrusted them with the capital of their trust.Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.PM Modi participates in Janjatiya Gaurav Divas programme in Jamui, Bihar
November 15th, 11:00 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்
October 03rd, 08:52 am
கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார்.கூட்டு முயற்சிகள் சமூக மாற்றத்தில் அதிசயங்களை நிகழ்த்தும்: பிரதமர்
October 03rd, 08:50 am
கூட்டு முயற்சிகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூக மாற்றத்தில் இது அதிசயங்களை நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் அடங்கும்: பிரதமர்
October 02nd, 05:56 pm
மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் ஒன்றாக உள்ளது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.தூய்மை இந்தியா இயக்கம் 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் தனித்துவமான இயக்கம்: பிரதமர்
October 02nd, 05:48 pm
தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததோடு, இது 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் ஒரு தனித்துவமான இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.தில்லியில் தூய்மை நிகழ்வில் இளைஞர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
October 02nd, 04:45 pm
இது நோய்களைத் தடுக்க உதவுகிறது, நாங்கள் எப்போதும் சுத்தமாக இருப்போம். மேலும், நம் நாடு சுத்தமாக இருந்தால், சுற்றுச்சூழலை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டை குறிக்கும் வகையில் இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார்
October 02nd, 04:40 pm
தில்லியில் இன்று பள்ளிச் சிறார்களுடன் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டு குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக உலக அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து பிரதமருக்கு குவியும் வாழ்த்துகள்
October 02nd, 02:03 pm
தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு உலக அமைப்புகளின் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மேம்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை மூலம் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு இந்தியாவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது என்பதை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்க செயல்பாடுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
October 02nd, 09:38 am
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களுடன் தூய்மை இயக்க செயல்பாடுகளில் பங்கேற்றார். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தூய்மை தொடர்பான நடவடிக்கைகளில் குடிமக்கள் இன்று பங்கேற்க வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு
October 02nd, 09:19 am
இந்தியாவை தூய்மை நாடாக மாற்றுவதற்கும், மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்குமான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 29th, 12:45 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிராவின் பிரபலமான முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, புனேவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவையில் உள்ள எனது இளம் சகாவுமான திரு முரளிதர் அவர்களே, காணொலிக் காட்சி மூலம் இணைந்திருக்கும் இதர மத்திய அமைச்சர்களே, மகாராஷ்டிராவின் மூத்த அமைச்சர்களே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைத்து சகோதர சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 29th, 12:33 pm
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக புனேவில் தமது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இன்றைய மெய்நிகர் நிகழ்வுக்கு வழவகுத்த தொழில்நுட்பத்தை அவர் பாராட்டினார். சிறந்த ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நிலம் மகாராஷ்டிரா வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் காண்கிறது என்று அவர் கூறினார். ஸ்வர்கேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கப்பட்டதையும், புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே முதல் பெண்கள் பள்ளியில் நினைவு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் பேசினார். புனேயில் வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறைகளை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்
September 05th, 04:11 pm
நாட்டில் பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகளின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்