ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 27th, 05:58 pm
உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது.குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 28th, 08:06 pm
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்
August 28th, 05:08 pm
காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.சுசூகி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
May 23rd, 12:37 pm
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் டோக்கியோவில், சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.