PM to visit Andhra Pradesh and Odisha on 8th-9th January
January 06th, 06:29 pm
Prime Minister Shri Narendra Modi will visit Andhra Pradesh and Odisha on a two day tour from 8th-9th January 2025. In a major push for sustainable development, industrial growth and infrastructure enhancement, Prime Minister will dedicate to the nation, inaugurate and lay the foundation stone of projects worth over Rs. 2 Lakh Crore at Visakhapatnam on 8th January at 5:30 PM. He will also inaugurate the 18th Pravasi Bhartiya Divas (PBD) convention at Bhubaneswar on 9th January at 10 AM.PM to inaugurate and lay foundation stone of multiple railway projects on 6th January
January 05th, 06:28 pm
Prime Minister Narendra Modi will inaugurate and lay the foundation stone of various railway projects on 6th January at 12:30 PM via video conferencing. He will inaugurate the new Jammu Railway Division. He will also inaugurate the Charlapalli New Terminal Station in Telangana and lay the foundation stone of Rayagada Railway Division Building of East Coast Railway.இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
December 16th, 03:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 01:30 pm
மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 09th, 01:00 pm
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.டிசம்பர் 9 அன்று பிரதமர் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
December 08th, 09:46 am
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி - மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர், நவம்பர் 25 அன்று தொடங்கி வைக்கிறார்
November 24th, 05:54 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் (ஐசிஏ) உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ தொடங்கி வைப்பதுடன் ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ நவம்பர் 25 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 22nd, 10:50 pm
அமைச்சர் திரு வின்ஃப்ரைட் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்து மதிப்புமிக்க தாய்மார்களே!நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 22nd, 09:00 pm
ஜெர்மனி ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த உச்சிமாநாடு இந்திய-ஜெர்மன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது என்று கூறினார். இன்றைய தகவல் யுகத்தில் ஜெர்மனி மற்றும் ஜெர்மன் மக்களுடன் தொடர்பு கொள்ள இந்தியாவில் இருந்து ஒரு ஊடகக் குழு முயற்சிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெர்மனியையும், ஜெர்மனி மக்களையும் இந்திய மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு தளத்தை வழங்கும்”, என்று கூறினார்.இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அளித்த கூட்டறிக்கையை பல ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள் அங்கீகரித்தன
November 20th, 07:52 am
டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 20th, 01:40 am
இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை
November 20th, 01:34 am
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகத்தை ஊக்குவிக்கும்: பிரதமர்
November 10th, 01:07 pm
கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுப்பதுடன், தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 09th, 11:00 am
உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
November 09th, 10:40 am
உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை
October 25th, 08:28 pm
புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 25th, 01:50 pm
முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை
October 25th, 11:20 am
இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
October 21st, 10:25 am
கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை - எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 21st, 10:16 am
புதுதில்லியில் இன்று என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன், உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.