நவ்சாரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் பிரதமர் ஆற்றிய உரை

February 22nd, 04:40 pm

நாடு முழுவதும், நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் தற்போது ஒரு உற்சாகமான விவாதம் நடந்து வருகிறது. அந்த விவாதம் மோடியின் உத்தரவாதம் என்பதைச் சுற்றியே சுழல்கிறது. மோடி என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவார் என்பதை ஒவ்வொரு குடிமகனும் ஒப்புக் கொள்கிறான். ஒருவேளை நாட்டின் பிற பகுதிகளுக்கு இது ஒரு புதுமையான கருத்தாக இருக்கலாம், ஆனால் மோடியின் வார்த்தை அவரது பந்தம் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதை குஜராத் மக்கள் பல ஆண்டுகளாக அறிவார்கள்

குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

February 22nd, 04:25 pm

குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மின் உற்பத்தி, ரயில், சாலை, ஜவுளி, கல்வி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டங்கள் ஆகும்.

குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 17th, 12:00 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் வைர வணிக மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 11:30 am

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

டிசம்பர் 17-18 தேதிகளில் சூரத் மற்றும் வாரணாசிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

December 16th, 10:39 am

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 17-18 தேதிகளில் குஜராத்தின் சூரத் மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10:45 மணியளவில், சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். காலை 11.15 மணிக்கு சூரத் வைர சந்தையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், வாரணாசி செல்லும் அவர், மாலை, 3:30 மணிக்கு, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.