குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 04:19 pm

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய முனையக் கட்டடத்தை அவர் நடந்து சென்று பார்வையிட்டார்.

டிசம்பர் 17-18 தேதிகளில் சூரத் மற்றும் வாரணாசிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

December 16th, 10:39 am

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 17-18 தேதிகளில் குஜராத்தின் சூரத் மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10:45 மணியளவில், சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். காலை 11.15 மணிக்கு சூரத் வைர சந்தையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், வாரணாசி செல்லும் அவர், மாலை, 3:30 மணிக்கு, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.

சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

December 15th, 09:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.