ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா / தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 12:00 pm
கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 27th, 11:15 am
ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.