இந்தியா-மொரீஷியஸ்: திட்டங்களின் மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 29th, 01:15 pm
கடந்த 6 மாதங்களில் பிரதமர் ஜுக்னவுத்துக்கும் எனக்கும் இடையே நடைபெறும் ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான துடிப்பான, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது ஒரு சான்றாகும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய பங்கெடுப்பாளராக மொரீஷியஸ் திகழ்கிறது.மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்
February 29th, 01:00 pm
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும். 2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ, ரூபே அட்டை சேவைகளை தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களின் தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு.பி.ஐ சேவைகளைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 12th, 01:30 pm
மேதகு அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே, மேதகு பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் அவர்களே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, இலங்கை, மொரீஷியஸ் மற்றும் பாரத மத்திய வங்கிகளின் மதிப்புமிக்க ஆளுநர்களே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மதிப்பிற்குரியவர்களே அனைவருக்கும் வணக்கம்!மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 01:00 pm
இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திரமோடி வரவேற்பு
November 10th, 08:04 pm
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், திரு. ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. லாய்ட் ஆஸ்டின் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசனின் இந்திய பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
October 09th, 07:00 pm
பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை
August 02nd, 10:18 pm
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர்.பைடனுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடல்
April 10th, 09:02 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர்.பைடனுடன் 11, ஏப்ரல் 2022 அன்று காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இரு தலைவர்களும், தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்புகளை ஆய்வு செய்வதுடன் தெற்காசியா, இந்தோ - பசிபிக் பிராந்திய மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாற உள்ளனர். காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கலந்துரையாடல், இருதரப்பு விரிவான சர்வதேச ராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் தங்களது வழக்கமான மற்றும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர வழிவகுக்கும்.2021-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் 21 பிரத்யேகப் புகைப்படங்கள்
December 31st, 11:59 am
2021-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சில சிறப்புப் புகைப்படங்களைக் காணலாம்.