‘உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுப்போம்’ என்ற பிரதமரின் அழைப்புக்கு ஆன்மீக தலைவர்கள் அமோக ஆதரவு
November 17th, 02:14 pm
தற்சார்பு இந்தியாவுக்கு, உள்ளூர் பொருட்களை வாங்குவதைப் பிரபலப்படுத்த ஆன்மீகத் தலைவர்கள் உதவ வேண்டும் என பிரதமர் நேற்று விடுத்த வேண்டுகோளுக்கு, நாட்டின் முக்கிய ஆன்மீக தலைவர்களிடம் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு துறவிகள் சமூகம் மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக, உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆன்மீகத் தலைவர்கள், இதற்கு ஆதரவு அளிக்க உறுதி பூண்டுள்ளனர்.தற்சார்பு இந்தியாவுக்கு உள்ளூர் பொருட்கள் வாங்குவதை பிரபலப்படுத்த உதவ வேண்டும் ஆன்மீக தலைவர்களிடம் பிரதமர் வேண்டுகோள்
November 16th, 12:50 pm
உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுப்பதை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திர போராட்டத்தின் அடித்தளத்தை பக்தி இயக்கம் வலுப்படுத்தியது என்றார். நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் சாமியார்கள், மடாதிபதிகள், முனிவர்கள் மற்றம் ஆச்சார்யாக்களால் தூண்டப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், இந்த உணர்வு, சுதந்திர போராட்டத்துக்கு மிகுந்த பலத்தை வழங்கியதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.PM Modi requests spiritual leaders to promote Aatmanirbhar Bharat by going vocal for local
November 16th, 12:46 pm
PM Modi unveiled ‘Statue of Peace’ to mark the 151st birth anniversary celebrations of Jainacharya Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj. Reiterating his stress on ‘vocal for local’ Shri Modi requested that as happened during the freedom struggle, all the spiritual leaders should amplify the message of Aatmanirbhar Bharat.உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மிகத் தலைவர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
November 16th, 12:45 pm
ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் 151-வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக 'அமைதிக்கான சிலையை' காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சமண குருவை கவுரவிக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ள சிலைக்கு 'அமைதிக்கான சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாமிரத்தை பிரதானமாகக் கொண்டு எட்டு உலோகங்களால் வடிக்கப்பட்டுள்ள இந்த 151 அங்குல உயர சிலை, ராஜஸ்தான், பாலி, ஜேத்புராவில் உள்ள விஜய் வல்லப் சாதனா கேந்திராவில், நிறுவப்பட்டுள்ளது.ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 16-ம் தேதி ‘ அமைதி சிலை’யை பிரதமர் திறந்து வைக்கிறார்
November 14th, 06:06 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி , நவம்பர் 16, 2020 அன்று பகல் 12.30 மணிக்கு, ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ‘ அமைதி சிலை’யை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.