ஆயி ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்

January 13th, 12:00 pm

இன்று, புனிதமான பவுஷ் மாதத்தில், நாம் அனைவரும் ஆயி ஸ்ரீ சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். சோனல் மாதா ஆசீர்வாதத்தின் கீழ் இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது உண்மையில் ஒரு பாக்கியம்.

ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரை

January 13th, 11:30 am

பிரதமர் தமது காணொலி உரையில், புனித பவுஷ் மாதத்தில் ஸ்ரீ சோனல் மாவின் நூற்றாண்டு விழா நடைபெறுவதாகக் கூறினார். சோனல் மாதாவின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது ஒரு பாக்கியம் என்றும் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 04th, 11:00 am

சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

July 04th, 10:36 am

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.

ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனை தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

August 24th, 11:01 am

அம்ரிதா மருத்துவமனை மூலம் நம் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களே, ஹரியானா மாநில ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர்லால் கட்டார் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு கிருஷன் பால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு துஷ்யந்த் சவுதாலா அவர்களே, அனைவருக்கும் வணக்கம்!

ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் தொடங்கி வைத்தார்

August 24th, 11:00 am

ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் திரு.மனோகர் லால், துணை முதலமைச்சர் திரு.துஷ்யந்த் சௌதாலா, மத்திய அமைச்சர் திரு.கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‘உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுப்போம்’ என்ற பிரதமரின் அழைப்புக்கு ஆன்மீக தலைவர்கள் அமோக ஆதரவு

November 17th, 02:14 pm

தற்சார்பு இந்தியாவுக்கு, உள்ளூர் பொருட்களை வாங்குவதைப் பிரபலப்படுத்த ஆன்மீகத் தலைவர்கள் உதவ வேண்டும் என பிரதமர் நேற்று விடுத்த வேண்டுகோளுக்கு, நாட்டின் முக்கிய ஆன்மீக தலைவர்களிடம் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு துறவிகள் சமூகம் மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக, உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆன்மீகத் தலைவர்கள், இதற்கு ஆதரவு அளிக்க உறுதி பூண்டுள்ளனர்.