பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 13th, 02:10 pm

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 13th, 02:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய 'மகாயாகம்' உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

December 11th, 02:00 pm

மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, எல். முருகன் அவர்களே, இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகர், இலக்கிய அறிஞர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களே, பதிப்பாளர் வி. சீனிவாசன் அவர்களே, வந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே.

தமிழின் மகத்தான கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.

December 11th, 01:30 pm

மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று வெளியிட்டார். மாபெரும் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் சிறப்பான வெளியீட்டு விழா இன்று நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.

மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 07:05 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

October 05th, 07:00 pm

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜுக்கு பிரதமர் மரியாதை

October 05th, 02:41 pm

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜின் சமாதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் கலங்கரை விளக்கம் என்று திரு மோடி அவரைப் பாராட்டினார்.

பிரதமர் மோடியின் ஆன்மீக கன்னியாகுமரி பயணம்

May 31st, 02:32 pm

தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் கன்னியாகுமரிக்கு பயணம் செய்தார். வந்தவுடன் பகவதி அம்மன் கோவிலில் பூஜை செய்தார். இதைத் தொடர்ந்து, விவேகானந்தர் பாறை நினைவிடத்துக்குச் சென்ற அவர், அங்கு தியானத்தில் ஈடுபட்டார்.

சமண சமய ஞானி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் சமாதி அடைந்ததற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

February 18th, 10:58 am

சமண சமய ஞானி ஆச்சார்யா வித்யாசாகர் மகாராஜ் சமாதி நிலை அடைந்ததையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல. தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கம்

January 12th, 11:00 am

இன்று அனைத்து இந்தியர்களுக்கும், உலகெங்கிலும் பரவியுள்ள ராமரின் பக்தர்களுக்கும் ஒரு புனிதமான தருணம்! எங்கு பார்த்தாலும் ராமர் மீது பக்தி பொங்கும் சூழல்! ராமரின் இனிமையான கோஷங்கள், எல்லா திசைகளிலும் ராம பஜனைகளின் நேர்த்தியான அழகு! அந்த வரலாற்று சிறப்புமிக்க புனிதத் தருணமான ஜனவரி 22-ம் தேதியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்வைக் காண நான் என்னை அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். கற்பனைக்கு அப்பாற்பட்ட தருணங்களை நான் அனுபவிக்கும் நேரம் இது.

ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டாவுக்கான 11 நாள் சிறப்பு வழிபாட்டை பிரதமர் தொடங்கினார்

January 12th, 10:31 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜனவரி 22 அன்று அயோத்தி தாமில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டத்தை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்கை இன்று தொடங்கியுள்ளார். இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு. தவிர, நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, கடவுள் வழிபாட்டிற்காக நமக்குள் யோகா மற்றும் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, குடமுழுக்கு நிகழ்வுக்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் மற்றும் கடுமையான விதிகள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஆன்மீகப் பயணத்தில் சில புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மகான்களிடமிருந்து எனக்குக் கிடைத்த வழிகாட்டுதலின்படியும், அவர்கள் பரிந்துரைத்த 'யம நியமங்களின்' படியும், இன்று முதல் 11 நாட்களுக்கு ஒரு சிறப்பு சடங்கைத் தொடங்குகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 04th, 11:00 am

சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

July 04th, 10:36 am

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.

கோட்டயத்தில் பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

April 18th, 10:33 am

கோட்டயத்தில் (சபரிமலைக்காக) பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இரண்டு ஆயிரத்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

December 14th, 05:45 pm

பரம் பூஜ்ஜிய மகாந்த் சுவாமி அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, ஆளுநர் அவர்களே, முதல்வர் அவர்களே மற்றும் ‘சத்சங்' குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே! இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மதிப்பிற்குரிய துறவிகள் அனைவரின் பாதங்களையும் இத்தருணத்தில் நான் வணங்குகிறேன். போற்றுதலுக்குரிய மகாந்த் சுவாமி அவர்களின் ஆசியுடன் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது, நாட்டின் மற்றும் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தும்.

PM addresses inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav

December 14th, 05:30 pm

PM Modi addressed the inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav in Ahmedabad. “HH Pramukh Swami Maharaj Ji was a reformist. He was special because he saw good in every person and encouraged them to focus on these strengths. He helped every inpidual who came in contact with him. I can never forget his efforts during the Machchhu dam disaster in Morbi”, the Prime Minister said.

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை

October 18th, 01:40 pm

90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்

October 18th, 01:35 pm

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.

மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020

October 25th, 11:00 am

நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.

West Bengal will play a significant role in ‘Purvodaya’: PM Modi

October 22nd, 10:58 am

Prime Minister Narendra Modi joined the Durga Puja celebrations in West Bengal as he inaugurated a puja pandal in Kolkata via video conferencing today. The power of maa Durga and devotion of the people of Bengal is making me feel like I am present in the auspicious land of Bengal. Blessed to be able to celebrate with you, PM Modi said as he addressed the people of Bengal.