புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜூலை 26 அன்று பிரதமர் கார்கில் பயணம் மேற்கொள்கிறார்
July 25th, 10:28 am
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மெய்நிகர் வடிவில் தொடங்கிவைப்பார்.புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 11:28 pm
பாரத மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளர், சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை, இந்த தொழிலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களை கௌரவிப்பது எனது பாக்கியம். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கிறது.புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
July 26th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 அஞ்சல்தலையை அவர் வெளியிட்டார். மாநாட்டு மையத்திற்கு ‘பாரத மண்டபம்’ என பெயர் சூட்டும் விழா ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டதையும், அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள இந்த புதிய ஐஇசிசி வளாகம் இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும்.வேலைவாய்ப்பு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 13th, 11:00 am
தேசிய அளவிலான இது போன்ற வேலைவாய்ப்பு விழாக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பா.ஜ.க அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுதலையின் அமிர்த காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கு உங்கள் முன் உள்ளது. நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்
June 13th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் இன்று (13.06.2023) காணொலி காட்சி மூலம் உரையாற்றியதுடன் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 14th, 12:45 pm
அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் திரு. கேசப் மஹந்தா அவர்களே, உங்கள் அனைவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.அசாம் மாநிலம் குவாஹத்தியில் ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
April 14th, 12:30 pm
அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி,நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை வழங்கி ‘உங்கள் வீடு தேடி மருத்துவம்’ இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் வீடியோ செய்தி மூலம் பிரதமரின் உரை
April 04th, 09:46 am
மரியாதைக்குரிய நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான நண்பர்களே!பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான 5வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
April 04th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 5வது சர்வதேச பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு-2023 மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 06th, 11:50 am
துருக்கியிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தியமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
February 06th, 11:46 am
பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் இதன் வணிக ரீதியான விற்பனையையும் தொடங்கி வைத்தார்.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 19th, 05:15 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ராகுல் நர்வேகர் அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இங்குள்ள ஏராளமான என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்!மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 19th, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மும்பையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை பிரதமர் விடுவித்தார். மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் 2ஏ & 7-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுதல், 20 இந்துஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே தெருவோர உணவு கடைகளைத் துவக்குதல், மும்பை நகரில் 40 கிலோமீட்டர் சாலையை கான்கிரீட் சாலையாக்கும் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.கோவாவின் கோபாவில் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 11th, 06:45 pm
இந்த அற்புதமான விமான நிலையத்திற்காக கோவா மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடந்த 8 ஆண்டுகளில் உங்கள் அனைவரின் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்வேன். அதாவது நீங்கள் எங்கள் மீது பொழியும் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வட்டியுடன், வளர்ச்சியாக திருப்பித் தருவேன் என்று. இந்த நவீன விமான நிலையம் அந்தப் பாசத்தைத் திருப்பித் தரும் முயற்சிதான். இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு எனது அன்பான சக ஊழியரும் கோவாவின் புதல்வருமான மறைந்த மனோகர் பாரிக்கர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டதால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது மனோகர் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரின் மூலம் இங்கு வரும் ஒவ்வொரு நபரின் நினைவிலும் பாரிக்கர் அவர்களின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். (பிரதமர் உரையின் தொடக்கம் உள்ளூர் மொழியில் அமைந்தது)PM inaugurates greenfield International Airport in Mopa, Goa
December 11th, 06:35 pm
PM Modi inaugurated Manohar International Airport, Goa. The airport has been named after former late Chief Minister of Goa, Manohar Parrikar Ji. PM Modi remarked, In the last 8 years, 72 airports have been constructed compared to 70 in the 70 years before that. This means that the number of airports has doubled in the country.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
November 11th, 12:32 pm
நண்பர்களே,நிந்த இருபெரும் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் வகையில், நாம் பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தி வருகிறோம். இன்று கர்நாடகம், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் வந்தே பாரத் ரயிலைப் பெற்றுள்ளது. இந்த ரயில் சென்னையையும், இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகர் பெங்களூருவையும், பாரம்பரிய நகரமான மைசூருவையும் இணைக்கிறது. இன்று தொடங்கப்பட்ட பாரத் கவுரவ காசி தர்ஷன், கர்நாடக மக்களை அயோத்தி, பிரயாக்ராஜ், காசி ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்கிறது. இன்று கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது முனையம் தொடங்கப்பட்டுள்ளது.PM Modi attends a programme at inauguration of 'Statue of Prosperity' in Bengaluru
November 11th, 12:31 pm
PM Modi addressed a public function in Bengaluru, Karnataka. Throwing light on the vision of a developed India, the PM said that connectivity between cities will play a crucial role and it is also the need of the hour. The Prime Minister said that the new Terminal 2 of Kemepegowda Airport will add new facilities and services to boost connectivity.Infrastructure is extremely important for development: PM Modi
May 26th, 12:26 pm
PM Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge built over River Brahmaputra in Assam. The Prime Minister said that infrastructure was extremely important for development. He added that the bridge would enhance connectivity between Assam and Arunachal Pradesh, and open the door for economic development on a big scale.