டாவோஸ் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை
January 21st, 09:04 pm
“டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்க, இந்தியாவின் நல்ல நண்பரும், உலப் பொருளாதார அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் கிளாவ்ஸ் ஸ்ச்வாப் அழைப்பின் பேரில் நான் செல்கிறேன். “மாறுபட்ட கருத்துகள் கொண்ட உலகில் பகிர்ந்து கொள்ளக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது” என்பது இந்த அமைப்பின் அடிப்படை ஆய்வுப் பொருளாக உள்ளது. இது சிந்தனைக்கு உரியதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது.