ஸ்மிருதி வனத் திறப்பு விழா தினத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
August 29th, 08:32 pm
2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்மிருதி வனம் என்ற நினைவிடம் திறக்கப்பட்ட தினத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.நீத்தார் நினைவு வனம் குஜராத்தின் வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துகிறது: பிரதமர்
October 14th, 09:56 pm
2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த புஜ்ஜில் உள்ள ஸ்ம்ரிதி வனம் என்று அழைக்கப்படும் நீத்தார் நினைவு வனத்திற்கு மக்கள் வருகை தருவது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் புஜ்ஜில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
August 28th, 11:54 am
புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!புஜ் பகுதியில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்
August 28th, 11:53 am
புஜ் பகுதியில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.ஆகஸ்ட் 27-28 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
August 25th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 27-28 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 27 அன்று பிற்பகல் 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். ஆகஸ்ட் 28 அன்று காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் பின்னர் நண்பகல் 12 மணி அளவில் புஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பார். பிற்பகல் 5 மணி அளவில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுவார்.