சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
September 05th, 04:57 pm
முதலீட்டு நிதி, கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி, நிலைத்தன்மை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.09.2024) கலந்துரையாடினார். சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு கான் கிம் யோங், சிங்கப்பூர் உள்துறை, சட்ட அமைச்சர் திரு கே சண்முகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் சந்தித்துப் பேசினார்
September 05th, 03:10 pm
சிங்கப்பூரில் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூரில் இன்று சந்தித்தார்.சிங்கப்பூர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்
September 05th, 03:00 pm
இந்தியா–சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு அதிபர் திரு தர்மன் அளித்து வரும் உணர்வுப் பூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விஷயத்தில், இந்த உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்துவது, கூட்டு ஒத்துழைப்புக்கான வலுவான முன்னோக்கிய பாதையை வகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்த எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் திரு தர்மனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் பிரதமர் சந்திப்பு
September 05th, 02:18 pm
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான மேதகு திரு. லீ சியன் லூங்கை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பிரதமரை கவுரவிக்கும் வகையில் மூத்த அமைச்சர் மதிய விருந்து அளித்தார்.சிங்கப்பூரில் ஏஇஎம் நிறுவனத்தை பிரதமர் பார்வையிட்டார்
September 05th, 12:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கும், செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையில் முன்னணி சிங்கப்பூர் நிறுவனமான ஏஇஎம்-ஐ பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏஇஎம்-ன் பங்களிப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவுக்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. சிங்கப்பூர் செமிகண்டக்டர் தொழில்துறை அமைப்பு, சிங்கப்பூரில் செமிகண்டக்டர் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தது. இந்தத் துறையைச் சேர்ந்த பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 2024 செப்டம்பர் 11-13 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமரை சந்தித்துப் பேசினார்
September 05th, 10:22 am
இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் விரிவான மற்றும் ஆழ்ந்த அளப்பரிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த உறவை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக வளரச் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இது இந்தியாவின் கிழக்கத்திய கொள்கைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
September 05th, 09:00 am
நீங்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாம் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேற்றத்தை அடையும் என்று நான் நம்புகிறேன்.PM Modi arrives in Singapore
September 04th, 02:00 pm
PM Modi arrived in Singapore. He will hold talks with President Tharman Shanmugaratnam, Prime Minister Lawrence Wong, Senior Minister Lee Hsien Loong and Emeritus Senior Minister Goh Chok Tong.பிரதமரின் புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூர் பயணம்
September 03rd, 07:30 am
அடுத்த இரண்டு நாட்களில், பிரதமர் மோடி புருனே தருசலாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இந்தியா-புருனே தருஸ்ஸலாமில், பிரதமர் மோடி, மாண்புமிகு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்கிறார். சிங்கப்பூரில் அவர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு.பி.ஐ சேவைகளைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 12th, 01:30 pm
மேதகு அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே, மேதகு பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் அவர்களே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, இலங்கை, மொரீஷியஸ் மற்றும் பாரத மத்திய வங்கிகளின் மதிப்புமிக்க ஆளுநர்களே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மதிப்பிற்குரியவர்களே அனைவருக்கும் வணக்கம்!மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 01:00 pm
இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்: பிரதமர்
November 14th, 09:43 am
சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் 511 திறன் மேம்பாட்டு மையங்கள் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 19th, 05:00 pm
நவராத்திரிப் பண்டிகை நடந்து வருகிறது. அன்னையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதாவை வணங்கும் நாள் இன்று. ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு எல்லா சந்தோஷமும், புகழும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த மகிழ்ச்சியையும் புகழையும் அடைவது கல்வி மற்றும் திறமையால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய நல்ல தருணத்தில், மகாராஷ்டிராவின் பிள்ளைகளுக்காகத் திறன் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய திட்டம் தொடங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பாதையில் முன்னேற உறுதி பூண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின், வாழ்க்கை இன்று காலை மங்களகரமானதாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிராவில் 511 ஊரகத் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 19th, 04:30 pm
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
September 16th, 02:25 pm
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) அறிமுகம்
September 09th, 10:30 pm
சிங்கப்பூர், வங்கதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 9 செப்டம்பர் 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 01:28 pm
கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
September 07th, 11:47 am
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 10:39 am
மேதகு அதிபர் ஜோகோ விடோடோ அவர்களே,சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் வாழ்த்து
September 02nd, 10:40 am
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.