குஜராத்தின் தரம்பூரில் ஶ்ரீமத் ராஜ்சந்திர மிஷனின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 04th, 07:25 pm
இந்த மிஷனுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது. சுதந்திர தின அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேவைப்படும் நேரத்தில் கடமையாற்றும் உணர்வும், இந்த அமைப்பின் நீண்டகால சேவையும் பாராட்டத்தக்கது. குஜராத்தின் சுகாதார சேவையில் பூஜ்ய குருதேவ் தலைமையில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் ஆற்றி வரும் பாராட்டுக்குரிய சேவைகள் போற்றத்தக்கது. புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஏழைகளுக்கு சேவையாற்றும் இந்த மிஷனின் உறுதிப்பாடு மேலும் வலுவடைந்திருப்பதுடன், இந்த மருத்துவமனையும், ஆராய்ச்சி மையமும், அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும். சுதந்திர தின ‘அமிர்த காலத்தில்’ ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இவை வலுசேர்க்கும். அத்துடன், சுகாதார சேவை துறையில் அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வுக்கும் இது வலுசேர்க்கும்.குஜராத்தின், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 04th, 04:30 pm
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திற்கு உட்பட்ட தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.