குஜராத்தின், சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் சுருக்கம்

August 20th, 11:01 am

ஜெய் சோம்நாத், மதிப்பிற்குரிய லால் கிருஷ்ண அத்வானி ஜி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ஜி உள்ளிட்ட என்னோடு பங்கேற்றுள்ளவர்களே, பக்தர்களே அனைவருக்கும் வணக்கம்!

சோம்நாத்தில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

August 20th, 11:00 am

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், மீண்டும் கட்டப்பட்ட ஜூனா சோம்நாத் கோயில் ஆகியவை உட்பட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பார்வதி கோயிலுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் திரு லால் கிருஷ்ணா அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று பிரதமர் திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

August 18th, 05:57 pm

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சோம்நாத் நடை பாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.