உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பலவகை திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

December 04th, 12:35 pm

உத்தராகண்டின் மதிப்புமிகு மூத்த குடிமக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை நான் தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் சிறப்பானவற்றை செய்திருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

December 04th, 12:34 pm

அப்பகுதியின் நீண்டகால பிரச்சினையான நிலச்சரிவுகளை எதிர்கொண்டு பயணத்தை பாதுகாப்பாக ஆக்குவதில் கவனம் செலுத்தும் வகையிலான ஏழு திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை-58-ல் தேவ்பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையில் மற்றும் பிரம்மபுரி முதல் கொடியாலா வரையில் சாலை விரிவாக்க திட்டம், யமுனை ஆற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள 120 மெகவாட் நீர் மின்சார திட்டம், டேராடூனில் இமாலய கலாச்சார மையம் மற்றும் அதி நவீன வாசனை பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்

December 01st, 12:06 pm

டேராடூனுக்குப் பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.