தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் மரியாதை

March 23rd, 09:46 am

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளையொட்டி 21-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

April 20th, 10:07 am

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளையொட்டி 21-ம் தேதி இரவு 9.15 மணிக்கு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதுடன், நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியை இந்திய அரசு தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் (ஏப்ரல் 20 மற்றும் 21) நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாடகர்களும் குழந்தைகளும் ‘ஷாபாத் கீர்த்தனையில்’ பங்கேற்பார்கள். குரு தேஜ் பகதூர் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரமாண்ட ஒளி - ஒலி கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறும். இது தவிர சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான 'கட்கா'வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தியாகிகள் தினத்தையொட்டி தியாகிகளுக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

March 23rd, 09:19 am

தியாகிகள் தினமான இன்று பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

March 22nd, 11:45 am

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மார்ச் 23 அன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வின் போது திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.