Science for Self-Reliance is our mantra: PM Modi
September 26th, 05:15 pm
PM Modi dedicated to the nation three PARAM Rudra Supercomputers worth around Rs 130 crore. Developed indigenously under the National Supercomputing Mission, these supercomputers have been deployed in Pune, Delhi and Kolkata to facilitate pioneering scientific research. The PM also inaugurated a High-Performance Computing system tailored for weather and climate research.மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 26th, 05:00 pm
சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024-ல் இந்தியாவையும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் முன்னணி செமிகண்டக்டர் தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டினர்
September 11th, 04:28 pm
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். செமிகான் இந்தியா 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை 'குறைகடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் குறைகடத்தி உத்திகளையும் கொள்கையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் ஜாம்பவான்களின் உயர்நிலைத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும், 150-க்கும் அதிகமான பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
September 11th, 12:00 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜிதின் பிரசாதா அவர்களே, உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து ஜாம்பவான்களே, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உலகின் அனைத்து கூட்டாளர்களே, பிற புகழ்பெற்ற விருந்தினர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் வணக்கம்!உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 11th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை திரு மோடி பார்வையிட்டார். செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் குறைக்கடத்தி உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும்.