கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகத்தை ஊக்குவிக்கும்: பிரதமர்
November 10th, 01:07 pm
கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுப்பதுடன், தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 13th, 11:01 am
மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர், திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, ஆட்டோ தொழிற்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்கள், அனைத்து ஓஈம் OEM சங்கங்கள், உலோகம் மற்றும் ஸ்கிராப்பிங் தொழிலில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
August 13th, 11:00 am
குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பயன்தீர்ந்த வாகனங்களை அழிக்கும் கொள்கையின் கீழ், வாகன அழிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த அழிப்பு மையத்தை உருவாக்குவதற்கு ,அலாங் கப்பல் உடைக்கும் தொழில் நடைபெறும் விதம் குறித்த விளக்கம் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இன்று அறிமுகமாகும் வாகனக் கழிவு கொள்கை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்: பிரதமர்
August 13th, 10:22 am
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இன்று தொடங்கப்பட்டுள்ள வாகனக் கழிவு கொள்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஆகஸ்ட் 13 அன்று குஜராத்தில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
August 11th, 09:35 pm
குஜராத்தில், ஆகஸ்ட் 13-ந் தேதியன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.