ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்தில், எஸ்.சி.ஓ சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக வாரணாசி பரிந்துரைப்பு
September 16th, 11:50 pm
செப்டம்பர் 16, 2022 அன்று உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில், 2022-2023 காலகட்டத்தில் வாரணாசி நகரம் முதல் எஸ்.சி.ஓ சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார்.எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 16th, 01:30 pm
இன்று உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுள்ள போது, எஸ்சிஓ-வின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நமது பிராந்தியத்தில், நம்பிக்கையான, வலுவான பல்வேறு வகையான விநியோக சங்கிலிகளை உருவாக்க எஸ்சிஓ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சிறப்பான தொடர்புகளுடன் முழுமையான போக்குவரத்து உரிமைகளை வழங்குவது அவசியமாகும்.பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்றம்
January 07th, 06:11 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் திரு. விளாடிமிர் புடினும் இன்று தொலைபேசி மூலம் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும், இன்று ரஷியாவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ரஷிய அதிபருக்கும் ரஷிய மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.இந்தியா- ரஷ்யா இடையே சாதாரண முறையிலான பேச்சுவார்த்தை
May 21st, 10:10 pm
ரஷ்யக் கூட்டமைப்பின் சோச்சி நகரில் 2018 மே 21 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் முதன் முறையாக சாதாரண முறையில் சந்தித்துப் பேச்சு நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகள் குறி்த்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததுடன், இந்தியா-ரஷ்யா இடையேயான பாரம்பரிய முறையில் உயர்மட்ட அளவிலான அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கும் வழி வகுத்தது.ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுவார்
May 21st, 04:40 pm
ரஷ்யாவிலுள்ள சோச்சியில் ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுவார்.