
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 28th, 10:00 am
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.
PM Modi and President of France jointly visit ITER facility
February 12th, 05:32 pm
PM Modi and President Emmanuel Macron visited the ITER facility in Cadarache, the first such visit by any Head of State or Government. They praised ITER’s progress in fusion energy and India’s key contributions through scientists and industries like L&T, Inox India, and TCS, highlighting India's commitment to advancing global clean energy research.வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து
January 29th, 08:27 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.India's youth are a force for global good: PM Modi at NCC Rally
January 27th, 05:00 pm
PM Modi addressed the NCC Rally in Delhi. The Prime Minister remarked that the youth of India will determine the development of the country and the world in the 21st century. He emphasised, “Indian youth are not only contributing to India's development but are also a force for global good.”PM Modi addresses the annual NCC PM Rally
January 27th, 04:30 pm
PM Modi addressed the NCC Rally in Delhi. The Prime Minister remarked that the youth of India will determine the development of the country and the world in the 21st century. He emphasised, “Indian youth are not only contributing to India's development but are also a force for global good.”தேர்தல் ஆணையம் அவ்வப்போது நமது வாக்குப்பதிவு செயல்முறையை பலப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’தின் போது (மனதின் குரல்)
January 19th, 11:30 am
In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
January 16th, 01:36 pm
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், விண்வெளித் துறையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறியுள்ளார்.The Genome India Project marks a defining moment in the country's biotechnology landscape: PM
January 09th, 06:38 pm
PM Modi delivered his remarks at the start of the Genome India Project. “Genome India Project is an important milestone in the biotechnology revolution”, exclaimed Shri Modi. He noted that this project has successfully created a perse genetic resource by sequencing the genomes of 10,000 inpiduals from various populations.ஜீனோம்இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
January 09th, 05:53 pm
ஜீனோம்இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆராய்ச்சித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை இன்று எடுத்து வைத்துள்ளது என்று கூறினார். ஜீனோம்இந்தியா திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி திட்டத்தை முடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆராய்ச்சியில் ஐஐஎஸ்சி, ஐஐடி, சிஎஸ்ஐஆர் மற்றும் டிபிடி-பிரிக் போன்ற 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைகள் அடங்கிய தகவல்கள் தற்போது இந்திய உயிரியல் தரவு மையத்தில் உள்ளன என்றும் அவர் கூறினார். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, இத்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினார்.மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
January 04th, 12:46 pm
மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜகோபால சிதம்பரம், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக இருந்தார். இந்தியாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு உத்தி திறன்களை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கினார் என திரு மோடி கூறியுள்ளார்.ரோகிணி கோட்போலே மறைவிற்கு பிரதமர் இரங்கல்
October 25th, 10:06 pm
ரோகிணி கோட்போலே மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கோட்போலே ஒரு முன்னோடி விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தார் என்றும், அறிவியல் உலகில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது முயற்சிகள் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
October 15th, 10:21 am
புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
September 22nd, 10:00 pm
அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 09:30 pm
நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 11th, 04:50 pm
தில்லியில் 109 புதிய பயிர் ரகங்களை இன்று வெளியிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலைக்கு உகந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் வெளியிட்டார்
August 11th, 02:00 pm
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.ஆதித்யா-எல் 1, தனது இலக்கை அடைந்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
January 06th, 05:15 pm
இந்தியாவின் முதல் சூரிய சூரிய ஆய்வு விண்கலமான, ஆதித்யா-எல் 1, அதன் இலக்கை அடைந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-01-2024) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.