
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2025 தொடங்குவதையொட்டி பிரதமரின் உரை
July 21st, 10:30 am
மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 21st, 09:54 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்தார். தனது கருத்துக்களில், கொடூரமான பஹல்காம் படுகொலையைத் தொட்டு, பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் தலைமையின் ஒருங்கிணைந்த குரலைப் பாராட்டினார். டிஜிட்டல் இந்தியாவின் உலகளாவிய அங்கீகாரத்தையும், குறிப்பாக UPI-ஐயும் பிரதமர் குறிப்பிட்டார். நக்சலிசம் மற்றும் மாவோயிசம் குறைந்து வருவதாக அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியையும் பாராட்டினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்
July 07th, 05:19 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்
July 06th, 01:48 am
பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். தமக்கும் தமது தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.Cabinet Approves RDI Scheme in Strategic and Sunrise Domains
July 01st, 04:59 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the Research Development and Innovation (RDI) Scheme with a corpus of Rs. One lakh Crore. It fosters self-reliance and global competitiveness in private sector thereby facilitating a conducive innovation ecosystem for the country as it marches towards Viksit Bharat at 2047.இந்தியா - குரோஷியா தலைவர்களின் அறிக்கை
June 19th, 06:06 pm
குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 29th, 11:01 am
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, மத்திய இணையமைச்சர்கள் திரு ஜிதேந்திர சிங் அவர்களே, திரு ஜெயந்த் சௌத்ரி அவர்களே, திரு சுகந்தா மஜூம்தார் அவர்களே, கல்வியாளர்களே, அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 29th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் ஒய்.யு.ஜி.எம் என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
February 12th, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.நிகழ்வுகளின் பட்டியல்: பிரதமரின் பிரான்ஸ் பயணம் (10-12 பிப்ரவரி 2025)
February 12th, 03:20 pm
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த இந்தியா-பிரான்ஸ் பிரகடனம்இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
January 25th, 01:00 pm
இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:09 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, அர்ஜென்டினா குடியரசு அதிபர் திரு ஜேவியர் மைலேயை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார்.இந்தியா - இத்தாலி இடையிலான ராஜாங்க ரீதியிலான கூட்டு செயல் திட்டம் 2025-2029
November 19th, 09:25 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 06:08 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை
October 25th, 07:47 pm
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்3-வது கவுடில்யா பொருளாதார மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
October 04th, 07:45 pm
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்.கே.சிங் அவர்களே, இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே! இது கௌடில்யர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பல அமர்வுகள் இங்கு நடைபெறும். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 04th, 07:44 pm
புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.Science for Self-Reliance is our mantra: PM Modi
September 26th, 05:15 pm
PM Modi dedicated to the nation three PARAM Rudra Supercomputers worth around Rs 130 crore. Developed indigenously under the National Supercomputing Mission, these supercomputers have been deployed in Pune, Delhi and Kolkata to facilitate pioneering scientific research. The PM also inaugurated a High-Performance Computing system tailored for weather and climate research.மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 26th, 05:00 pm
சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்
September 10th, 04:43 pm
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.