அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் ஆற்றிய உரை
December 14th, 05:50 pm
இது நம் அனைவருக்கும் – நமது சக நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். ஜனநாயகத்தின் திருவிழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகாலப் பயணம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்தப் பயணத்தின் மையத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தெய்வீகப் பார்வை உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் நாம் முன்னேறும்போது தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவது உண்மையிலேயே ஒரு முக்கியமான தருணமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்றமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 14th, 05:47 pm
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்திற்குப் பதிலளித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். அவையில் உரையாற்றிய திரு மோடி, ஜனநாயகத்தின் இந்தத் திருவிழாவை நாம் கொண்டாடுவது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜனநாயகத்தை மதிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பெருமை மற்றும் கவுரவம் அளிக்கும் விஷயமாகும் என்று குறிப்பிட்டார். நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகால குறிப்பிடத்தக்க மற்றும் மகத்தான பயணத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், 75 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனநாயக விழாவை கொண்டாடுவதற்கான நேரம் இது என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்டது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
December 11th, 02:00 pm
மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, எல். முருகன் அவர்களே, இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகர், இலக்கிய அறிஞர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களே, பதிப்பாளர் வி. சீனிவாசன் அவர்களே, வந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே.தமிழின் மகத்தான கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.
December 11th, 01:30 pm
மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று வெளியிட்டார். மாபெரும் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் சிறப்பான வெளியீட்டு விழா இன்று நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 01:30 pm
மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 09th, 01:00 pm
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.ஒடிசா பர்பாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 08:48 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஒடியா சமாஜத்தின் தலைவர் திரு சித்தார்த் பிரதான் அவர்களே, ஒடியா சமாஜத்தின் இதர பிரதிநிதிகளே, ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 24th, 08:30 pm
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.கயானாவுக்கு பிரதமரின் அரசுமுறைப் பயணம்: கிடைத்த பலன்கள் (நவம்பர் 19-21, 2024)
November 20th, 09:55 pm
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 05th, 07:05 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
October 05th, 07:00 pm
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்
September 10th, 04:43 pm
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 12th, 01:52 pm
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (12.07.2024) கூட்டாக சந்தித்தனர்.வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி விருது வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 11:00 am
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பேராசிரியர் வசிஷ்ட் திரிபாதி அவர்களே, காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் நாகேந்திரா அவர்களே, காசி விஸ்வநாத் நியாஸ் பரிஷத் தலைவர் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மதிப்பிற்குரிய அறிஞர்களே, பங்கேற்பாளர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்! அனைத்து அறிஞர்களுக்கும், குறிப்பாக இளம் அறிஞர்களுக்கு மத்தியில், மஹாமன என்ற புனித அரங்கில் ஞான நதியில் நீராடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காலத்தைக் கடந்த காசியும், தொன்மையானதாகக் கருதப்படும் காசியும், நமது நவீன இளைஞர்களும் எவ்வளவு பெரிய பொறுப்புடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மனதிற்கு மனநிறைவை அளிப்பது மட்டுமின்றி, பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது, அமிர்த காலத்தின் போது அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உண்மையில் காசி என்பது அனைத்து அறிவின் தலைநகரம். காசி நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி, காசி நாடாளுமன்ற அறிவுப் போட்டி, காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி ஆகிய விருதுகளை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமைக்காக, நான் அவர்களின் குடும்பத்தினரை வாழ்த்துகிறேன், அவர்களின் வழிகாட்டிகளையும் வாழ்த்துகிறேன். வெற்றியை நோக்கி சில அடிகள் பின்தங்கியவர்கள், சிலர் நான்காவது இடத்தை எட்டியவுடன் தடுமாறியிருக்கலாம், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காசியின் அறிவுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதும், அதன் போட்டிகளில் பங்கேற்றீர்கள் என்பதும் நமக்குப் பெருமை அளிக்கிறது. உங்களில் யாரும் தோற்றுவிடவுமில்லை, பின்தங்கவுமில்லை. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் நிறையக் கற்றுக்கொண்டீர்கள். பல படிகளை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளீர்கள். எனவே, இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர சபாகரில் நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்
February 23rd, 10:20 am
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுதந்திர சபாகரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டி குறித்த கையேட்டையும், காபி டேபிள் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத அறிவுப் போட்டி , காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி மற்றும் காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கு விருதுகளை வழங்கிய பிரதமர், வாரணாசியைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக் கருவிகள் மற்றும் தகுதி உதவித்தொகைகளையும் வழங்கினார். காசி நாடாளுமன்ற புகைப்படக் கலை போட்டி காட்சியகத்தையும் பார்வையிட்ட பிரதமர், சன்வர்த்தி காசி என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 11th, 12:15 pm
மதிப்பிற்குரிய துறவிகளே, குஜராத்தின் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, ஆரிய சமாஜத்தின் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 11th, 11:50 am
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தங்காராவில் உள்ள சுவாமி தயானந்தர் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.Last 10 years will be known for the historic decisions of the government: PM Modi
February 07th, 02:01 pm
Prime Minister Narendra Modi replied to the Motion of Thanks on the President's address to Parliament in Rajya Sabha. Addressing the House, PM Modi said that the 75th Republic Day is a significant milestone in the nation’s journey and the President during her address spoke about India’s self-confidence. PM Modi underlined that in her address, the President expressed confidence about India’s bright future and acknowledged the capability of the citizens of India.