ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா / தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 12:00 pm
கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 27th, 11:15 am
ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 01st, 11:05 am
எனது அமைச்சரவை நண்பர் திரு அமித் ஷா அவர்களே, இந்திய தேசிய கூட்டுறவு சங்க தலைவர் திரு திலீப் சங்கானி அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டுள்ள கூட்டுறவு சங்க உறுப்பினர்களே, விவசாய சகோதர, சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
July 01st, 11:00 am
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் கருப்பொருள் ‘அமிர்த காலம்: துடிப்பான இந்தியாவின் வளங்களை கூட்டுறவின் மூலம் பெறுதல்’ என்பதாகும். கூட்டுறவு சந்தைப்படுத்தல், கூட்டுறவு விரிவாக்கம், ஆலோசனை சேவைகளுக்காக இணையவழி வர்த்தக இணையதளங்களின் ஆன்லைன் சேவைகளையும் பிரதமர் திரு.மோடி தொடங்கி வைத்தார்.புதுதில்லியின் விக்யான் பவனில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘மண்ணைக் காப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 05th, 02:47 pm
உங்கள் அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்! இந்த நன்னாளில் சத்குருவிற்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும், இந்த அமிர்த காலத்தில் புதிய உறுதிப்பாடுகளை எடுத்து வரும் சூழலிலும், இதுபோன்ற இயக்கங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.PM Addresses 'Save Soil' Programme Organised by Isha Foundation
June 05th, 11:00 am
PM Modi addressed 'Save Soil' programme organised by Isha Foundation. He said that to save the soil, we have focused on five main aspects. First- How to make the soil chemical free. Second- How to save the organisms that live in the soil. Third- How to maintain soil moisture. Fourth- How to remove the damage that is happening to the soil due to less groundwater. Fifth, how to stop the continuous erosion of soil due to the reduction of forests.‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் 5 ஜுன் அன்று கலந்து கொள்கிறார்‘
June 04th, 09:37 am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான் பவனில், 5 ஜுன் அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.