DMK founded on 'Divide, Divide and Divide' and seeks to destroy 'Sanatan': PM Modi in Vellore

April 10th, 02:50 pm

Ahead of the Lok Sabha elections, Prime Minister Narendra Modi was accorded a warm welcome by the vibrant people of Vellore as he addressed a public meeting in Tamil Nadu. He said, I bow down to the history, mythology, and bravery of Vellore. He added, Vellore created a pivotal revolution against the British, and presently, its robust support for the N.D.A. showcases the spirit of 'Fir ek Baar Modi Sarkar'.

Massive crowd support in Vellore & Mettupalayam as PM Modi addresses two public meetings in Tamil Nadu

April 10th, 10:30 am

Ahead of the Lok Sabha elections, Prime Minister Narendra Modi was accorded a warm welcome by the massive crowd support in Vellore and Mettupalayam as he addressed two public meetings in Tamil Nadu. He said, I bow down to the history, mythology, and bravery of Vellore. He added, Vellore created a pivotal revolution against the British, and presently, its robust support for the N.D.A. showcases the spirit of 'Fir ek Baar Modi Sarkar'.

புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 14th, 12:00 pm

பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

January 14th, 11:30 am

புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) மீது மக்கள் காட்டிய பாசம் முன்னெப்போதும் இல்லாதது: பிரதமர் மோடி

May 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன். இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம். கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம். உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம். 100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது. மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள். மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காசியில் நடைபெற்ற காசி - தெலுங்கு சங்கமத்தில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்

April 29th, 07:46 pm

வணக்கம்! உங்கள் அனைவருக்கும் கங்கா-புஷ்கரலு விழா நல்வாழ்த்துகள்! நீங்கள் அனைவரும் காசிக்கு வந்திருப்பதால், நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் எனது விருந்தினர்கள்; ஒரு விருந்தினர் கடவுளுக்கு நிகரானவர் என்று நாங்கள் நம்புகிறோம். சில பணிகள் காரணமாக உங்களை வரவேற்க என்னால் அங்கு வரமுடியவில்லை என்றாலும், உங்கள் அனைவருக்கிடையிலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த கங்கா-புஷ்கரலு விழா கங்கையும், கோதாவரியும் ஒன்றாகக் கலப்பது போன்றது. சில மாதங்களுக்கு முன் இந்த காசி மண்ணில் காசி-தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது நினைவிருக்கலாம். சில நாட்களுக்கு முன்புதான் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் பாக்கியமும் கிடைத்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் உரையாற்றினார்

April 29th, 07:45 pm

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நடைபெற்ற காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

சௌராஷ்ட்ரா- தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 26th, 02:30 pm

குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களே, ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, திரு எல். முருகன் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

April 26th, 10:30 am

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கம நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஏப்ரல் 26 அன்று உரையாற்றுகிறார்

April 25th, 08:00 pm

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் நாளை

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 18th, 10:35 am

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

April 17th, 10:23 am

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளது: பிரதமர்

April 15th, 10:09 am

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. சவுராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

சௌரஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்பை வலுப்படுத்துகிறது: பிரதமர்

March 26th, 10:49 am

தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா சங்கமம் (எஸ்டி சங்கமம்) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.