இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின
July 28th, 11:37 pm
முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 21st, 06:31 am
யோகா மற்றும் தியான பூமியான காஷ்மீருக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் சூழல், சக்தி மற்றும் அனுபவங்கள் யோகாவிலிருந்து நாம் பெறும் வலிமையை நம்மை உணரச் செய்கிறது. யோகக்கலை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மண்ணிலிருந்து தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் உரை
June 21st, 06:30 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்
December 26th, 08:06 pm
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 26th, 04:12 pm
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை
September 26th, 04:11 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.We have devised many initiatives to take India-Saudi Arabia Strategic Partnership to the next level: PM Modi
September 11th, 03:51 pm
PM Modi expressed his happiness on the 1st meeting of the India-Saudi Arabia Strategic Partnership Council. He added that both countries are among the growing economic powers of the world and the Partnership for Global Investment and Infrastructure on the lines of the India-Middle East-Europe initiative will facilitate the creation of an Economic Corridor aiding the overall economic stability of the region and the world.உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நடைபாதை (ஐஎம்இசி)
September 09th, 09:40 pm
புதுதில்லியில் செப்டம்பர் 9, 2023 அன்று நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோ பைடன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டாண்மை (பி.ஜி.ஐ.ஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 09th, 09:27 pm
இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். எனது நண்பர் அதிபர் திரு பைடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டோம். இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள ஊடகமாக வரும் காலங்களில் இது மாறும்.பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிக்கையின் மொழியாக்கம்
August 24th, 01:32 pm
பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.முஸ்லீம் உலக லீக் தலைமைச்செயலாளருடன் பிரதமர் பேச்சுவார்த்தை
July 12th, 05:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, முஸ்லீம் உலக லீக் தலைமைச் செயலாளர் மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசாவுடன், சமயங்களுக்கு இடையேயான உரையாடல், தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிரான நடவடிக்கை, உலக அமைதியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் இந்தியா, சவுதி அரேபியா இடையேயான ஆழமான நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சவுதி அரேபிய நாட்டின் இளவரசருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்
June 08th, 10:07 pm
சவுதி அரேபியா நாட்டின் இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.குஜராத்தின் காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 12th, 10:31 am
குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா, திரு சி.ஆர்.பாட்டில் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, அகில பாரதிய சிக்ஷா சங் உறுப்பினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!குஜராத்தின் காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் பங்கேற்றார்
May 12th, 10:30 am
அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இது அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 29-ஆவது மாநாடாகும். இந்த நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். ‘மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வியின் இதயமாக ஆசிரியர்கள்’ என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும்.சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத் பிரதமர் திரு நரேந்திரமோடியுடன் சந்திப்பு
September 20th, 09:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத்-ஐ இன்று சந்தித்தார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 17th, 12:22 pm
முதலில், எஸ்சிஓ அமைப்பின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்காக அதிபர் ரஹ்மோனுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சவாலான உலகளாவிய மற்றும் பிராந்திய சூழலில் கூட இந்த அமைப்பை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். நடப்பாண்டில், தஜிகிஸ்தான் 30 வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், இந்திய மக்கள் சார்பாக தஜிகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும், அதிபர் ரஹ்மோனுக்கும் எனது வாழ்த்துக்கள்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மேன்மைமிகு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரிடையே தொலைபேசி உரையாடல்
March 10th, 07:01 pm
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மேன்மைமிகு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.