மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் லெப்டினன்ட் ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 27th, 02:46 pm

இன்று மீண்டும் இந்த புனித தலமான சித்ரகூடுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நம் முனிவர்கள் சொல்லி வந்த அதே அமானுஷ்ய இடம் இது தான். ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் சித்ரகூடத்தில் நிரந்தரமாக வாசம் செய்கிறார். இங்கு வருவதற்கு முன்பு, ஸ்ரீ ரகுபீர் கோயில் மற்றும் ஸ்ரீ ராம் ஜானகி கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது, மேலும் ஹெலிகாப்டரில் இருந்து காமத்கிரி மலைக்கு எனது வணக்கங்களையும் செலுத்தினேன். மதிப்பிற்குரிய ரஞ்சோடதாஸ் மற்றும் அரவிந்த் பாய் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். பகவான் ஸ்ரீராமரையும் ஜானகியையும் தரிசித்த அனுபவம், முனிவர்களின் வழிகாட்டுதல், சமஸ்கிருதக் கல்லூரி மாணவர்கள் வேத மந்திரங்களை அற்புதமாக உச்சரித்த அனுபவம் ஆகியவற்றை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

October 27th, 02:45 pm

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் இன்று (27.10.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை 1968 ஆம் ஆண்டில் பரம் பூஜ்ய ரஞ்சோதாஸ்ஜி மகராஜ் என்பவரால் நிறுவப்பட்டது. ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லால் பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜால் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார்.

PM condoles the passing away of Satguru Sri Sivananda Murty

June 10th, 03:00 pm