வலிமையான பெண்கள்- வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 11th, 10:30 am
எனது மதிப்பிற்குரிய அமைச்சரவை சகாக்களான திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சகோதரிகளே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள். மேலும், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான பெண்களும் காணொலி வாயிலாக நம்முடன் இணைந்துள்ளனர். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தை நான் சுற்றி பார்க்கும்போது, இது ஒரு மினி பாரத் போல் தெரிகிறது என்று எனக்குத் தோன்றியது. பாரதத்தின் ஒவ்வொரு மொழியையும் பேசும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!“வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
March 11th, 10:10 am
புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று “வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகள் நடத்திய விவசாயப் பணியில் ட்ரோன்கள் தொடர்பான செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார். நாடு முழுவதும் 10 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களைப் பிரதமர் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைத்துள்ள வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டியில் சுமார் ரூ. 8,000 கோடி வங்கிக் கடன்களையும் பிரதமர் வழங்கினார். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.மார்ச் 11 அன்று தில்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
March 10th, 11:14 am
புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 11 அன்று காலை 10 மணிக்கு வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிடுகிறார்.