சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்
October 31st, 08:07 am
சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேல், தனது அசைக்க முடியாத உத்வேகம், தொலைநோக்குப் பார்வை, அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நமது தேசத்தின் இயங்குநிலையை வடிவமைத்தார் என்று திரு மோடி கூறினார்.அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பிரதமர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்
October 29th, 02:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு, அம்பாஜி கோவிலில் பூஜை மற்றும் வழிபாடு செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் மெஹ்சானாவின் கெராலுவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவர் கெவாடியாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடைபெறும். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,, நிறைவடைந்த புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், காலை, 11:15 மணிக்கு, ஆரம்ப் 5.0-ல், 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டப் பிரிவில் பயிற்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.