ரயில்வே துறையை நவீனமயமாக்க கடந்த சில ஆண்டுகளில் இதற்கு முன் செய்யப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: பிரதமர் மோடி
January 17th, 02:36 pm
சமீப காலமாக ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த மாற்றம், ரயில்வே நவீனமயமாக்கத்தில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒற்றுமை சிலைவரை ரயில்கள் இணைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவதுடன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர்
January 17th, 02:36 pm
நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கெவாடியாவிற்கு ரயில்கள் இணைக்கப்பட்டிப்பதற்கு அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவிற்கு 8 ரயில்களையும், குஜராத் மாநிலத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களையும் காணோலி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.விடுபட்ட பகுதிகளை ரயில்வே மூலம் இணைத்து வருகிறோம்: பிரதமர் மோடி
January 17th, 02:36 pm
நாட்டில் உள்ள இணைக்கப்படாத பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளை ரயில்வே மூலம் இணைக்கப்படுகின்றன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.கெவாடியா இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது: பிரதமர் மோடி
January 17th, 02:36 pm
கெவாடியா, இனிமேல் குஜராத்தின் தொலை தூர பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதி இல்லை என்றும், அது உலகின் மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து, கெவாடியாவுக்கு, 8 ரயில்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் குஜராத்தில் பல ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.ஒற்றுமை சிலைக்கு தடையற்ற ரயில் இணைப்புக்கு வகை செய்யும் 8 ரயில்களைக் கொடி அசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 17th, 11:45 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிற்கு எட்டு ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு சீரான இணைப்பை வழங்கும். தபோய் – சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத், கெவாடியா பகுதிகளில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.ஒற்றுமை சிலைக்கு சீரான ரயில் இணைப்பை உறுதி செய்யும் வகையில் எட்டு புதிய ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
January 17th, 11:44 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிற்கு எட்டு ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு சீரான இணைப்பை வழங்கும். தபோய் – சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத், கெவாடியா பகுதிகளில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவை தொடங்கி வைத்தார் பிரதமர்
October 30th, 06:43 pm
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.