வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி விருது வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 23rd, 11:00 am

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பேராசிரியர் வசிஷ்ட் திரிபாதி அவர்களே, காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் நாகேந்திரா அவர்களே, காசி விஸ்வநாத் நியாஸ் பரிஷத் தலைவர் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மதிப்பிற்குரிய அறிஞர்களே, பங்கேற்பாளர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்! அனைத்து அறிஞர்களுக்கும், குறிப்பாக இளம் அறிஞர்களுக்கு மத்தியில், மஹாமன என்ற புனித அரங்கில் ஞான நதியில் நீராடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காலத்தைக் கடந்த காசியும், தொன்மையானதாகக் கருதப்படும் காசியும், நமது நவீன இளைஞர்களும் எவ்வளவு பெரிய பொறுப்புடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மனதிற்கு மனநிறைவை அளிப்பது மட்டுமின்றி, பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது, அமிர்த காலத்தின் போது அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உண்மையில் காசி என்பது அனைத்து அறிவின் தலைநகரம். காசி நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி, காசி நாடாளுமன்ற அறிவுப் போட்டி, காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி ஆகிய விருதுகளை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமைக்காக, நான் அவர்களின் குடும்பத்தினரை வாழ்த்துகிறேன், அவர்களின் வழிகாட்டிகளையும் வாழ்த்துகிறேன். வெற்றியை நோக்கி சில அடிகள் பின்தங்கியவர்கள், சிலர் நான்காவது இடத்தை எட்டியவுடன் தடுமாறியிருக்கலாம், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காசியின் அறிவுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதும், அதன் போட்டிகளில் பங்கேற்றீர்கள் என்பதும் நமக்குப் பெருமை அளிக்கிறது. உங்களில் யாரும் தோற்றுவிடவுமில்லை, பின்தங்கவுமில்லை. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் நிறையக் கற்றுக்கொண்டீர்கள். பல படிகளை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளீர்கள். எனவே, இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர சபாகரில் நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

February 23rd, 10:20 am

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுதந்திர சபாகரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டி குறித்த கையேட்டையும், காபி டேபிள் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். காசி நாடாளுமன்ற சமஸ்கிருத அறிவுப் போட்டி , காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி மற்றும் காசி நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கு விருதுகளை வழங்கிய பிரதமர், வாரணாசியைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக் கருவிகள் மற்றும் தகுதி உதவித்தொகைகளையும் வழங்கினார். காசி நாடாளுமன்ற புகைப்படக் கலை போட்டி காட்சியகத்தையும் பார்வையிட்ட பிரதமர், சன்வர்த்தி காசி என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.