முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 30th, 10:31 am
மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து இணைந்துள்ள லட்சக்கணக்கான நண்பர்கள் மற்றும் இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள பிரதிநிதிகளை நான் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக நித்தி ஆயோக்கை நான் குறிப்பாக பாராட்டுகிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 30th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.செப்டம்பர் 30-ம் தேதி 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 28th, 08:18 pm
'சங்கல்ப் சப்தாஹ்'வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அனைத்து ஆர்வமுள்ள வட்டாரங்களும் செயல்படும்