மணிப்பூர் சங்கை திருவிழாவையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள காணொலி காட்சி செய்தியின் தமிழாக்கம்

November 30th, 05:40 pm

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சங்கைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக முதலமைச்சர் என். பைரேன் சிங் அவர்களுக்கும் அவருடைய அரசுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

November 30th, 05:20 pm

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த மாநிலத்தின் மிகவும் பிரபலமான இந்த திருவிழா, மணிப்பூரை, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற உதவும். மணிப்பூரின் மாநில விலங்கான சங்காய் ரக மானின் பெயரிலேயே இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வகை மான்கள் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகின்றன.