காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி

November 01st, 04:01 pm

பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

November 01st, 03:54 pm

தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''

ஒருபுறம் ஜனநாயகத்தில் உறுதியாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மறுபுறத்தில் குடும்ப நலன்களுக்கானக் கூட்டணி: பிரதமர்

November 01st, 03:25 pm

சமஸ்டிபூரில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் விவசாயிகளுக்காக 1000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்.பி.ஓ.) உருவாக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது என்று கூறினார். ``நமது விவசாயிகளுக்கான வேளாண் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடியில் ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளது'' என்று அவர் கூறினார்.

Bihar can no more tolerate Jungle-Raj, what it needs is Vikas-Raj: PM Modi

October 08th, 04:33 pm



NDA Govt is committed to develop & transform Bihar: PM Modi at Parivartan Rally in Samastipur

October 08th, 03:00 pm