எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 16th, 01:30 pm
இன்று உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுள்ள போது, எஸ்சிஓ-வின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நமது பிராந்தியத்தில், நம்பிக்கையான, வலுவான பல்வேறு வகையான விநியோக சங்கிலிகளை உருவாக்க எஸ்சிஓ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சிறப்பான தொடர்புகளுடன் முழுமையான போக்குவரத்து உரிமைகளை வழங்குவது அவசியமாகும்.PM Modi arrives in Samarkand, Uzbekistan
September 15th, 10:01 pm
Prime Minister Shri Narendra Modi arrived in Samarkand, Uzbekistan this evening, at the invitation of the President of Uzbekistan, H.E. Mr. Shavkat Mirziyoyev, to attend the 22nd Meeting of the Council of Heads of State of the Shanghai Cooperation Organization (SCO).உஸ்பெகிஸ்தான் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை
September 15th, 02:15 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச் செல்கிறேன்.