ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 04th, 11:00 am

சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

July 04th, 10:36 am

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.

புட்டபர்த்தியில் ஜூலை 4-ஆம் தேதி சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

July 03rd, 06:29 pm

ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை நிறுவியுள்ளது. பிரசாந்தி நிலையம் என்பது ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரதான ஆசிரமம் ஆகும். கொடையாளர் திரு ரியூகோ ஹீராவின் நன்கொடையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையம், கலாச்சார பரிமாற்றம், ஆன்மீக மற்றும் உலகளாவிய இணக்கத்தை ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பலதரப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து, இணைந்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளை ஆராய்வதற்கு சிறந்த சூழலை இந்த மையம் வழங்கும். இதன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளும், உள்கட்டமைப்பும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஏதுவாக இருக்கும். பிரம்மாண்டமான வளாகத்தில் தியான அரங்கங்கள், கண்களுக்கு குளிர்ச்சியான தோட்டங்கள் மற்றும் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.