
ஷீரடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல் மற்றும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 26th, 03:46 pm
மஹாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பயஸ், கடின உழைப்பாளி மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திரா, அஜித், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களே, எங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க ஏராளமாகத் திரண்டு வந்துள்ள எனது குடும்ப உறுப்பினர்களே
மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 26th, 03:45 pm
மஹாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர், ஷீரடியில் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லாத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ), ஜல்கானிலிருந்து பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 -வது மற்றும் 4 -வது ரயில் பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 166-ல் சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மன்மத் முனையத்தில் கூடுதல் வசதிகள். அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் -சேய் நலப் பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளையும் திரு மோடி வழங்கினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 11:00 am
சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
July 04th, 10:36 am
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.PM offers prayers at Shri Saibaba's Samadhi Temple in Shirdi
October 19th, 11:30 am
PM Narendra Modi offered prayers at Shri Saibaba's Samadhi Temple in Shirdi, Maharashtra.