
இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை
March 12th, 02:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்
இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை
March 12th, 12:30 pm
மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொரீஷியஸ் பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 06:15 am
முதலாவதாக, பிரதமரின் உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.மொரீஷியஸ் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
March 10th, 06:18 pm
எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வதுதேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.மார்ச் 11-12, 2025 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொள்கிறார்
March 07th, 06:17 pm
பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமின் அழைப்பின் பேரில், மார்ச் 11-12 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்குச் சென்று தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். இந்தப் பயணத்தின் போது, அவர் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பார், இந்திய வம்சாவளி சமூகத்தினரிடம் பேசுவார், மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். பகிரப்பட்ட வரலாறு மற்றும் முன்னேற்றத்தில் வேரூன்றிய வலுவான இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
January 15th, 11:08 am
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 15th, 10:30 am
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
December 16th, 03:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
September 23rd, 12:11 am
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக திரு. மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல், இழப்பீடு அறிவிப்பு
August 04th, 06:47 pm
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.Congress wants to snatch your property and impose inheritance tax: PM Modi in Sagar
April 24th, 03:00 pm
Prime Minister Narendra Modi addressed a massive public gathering today in Sagar, Madhya Pradesh, reaffirming the strong support of the people for the BJP government and emphasizing the importance of stable governance for development.PM Modi addresses public meetings in Sagar and Betul, Madhya Pradesh
April 24th, 02:50 pm
Prime Minister Narendra Modi addressed massive public gatherings in Madhya Pradesh’s Sagar and Betul, reaffirming the strong support of the people for the BJP government and emphasizing the importance of stable governance for development.மத்தியப் பிரதேசத்தின் பினாவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
September 14th, 12:15 pm
மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா ஹர்தீப் சிங் பூரி, மத்தியப் பிரதேசத்தின் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:38 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்; நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்
October 18th, 11:25 am
அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் குஜராத் செல்லும் பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இலங்கை நிதியமைச்சர் திரு பசில் ராஜபக்சே பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்
March 16th, 07:04 pm
அதிகாரப்பூர்வ பயணமாக புதுதில்லி வந்த இலங்கை நிதி அமைச்சர் திரு பசில் ராஜபக்சே பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்
January 20th, 06:43 pm
மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.மொரீஷியஸில் வளர்ச்சித் திட்டங்களின் கூட்டுத் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய உரையின் தமிழாக்கம்
January 20th, 04:49 pm
130 கோடி இந்திய மக்களின் சார்பாக மொரீஷியஸ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் மற்றும் தைப்பூச காவடி நல்வாழ்த்துகள்.