பிரதமர் செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்
September 16th, 02:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணி அளவில் தார் என்ற இடத்தில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் மற்றும் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் இயக்கங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அத்துடன் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்
September 13th, 10:30 am
மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 13th, 10:00 am
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரமளித்து, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன: பிரதமர்
September 04th, 08:43 pm
ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குவதிலும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.ஆகஸ்ட் 2 ஆம் தேதி, பிரதமர், வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார்
July 31st, 06:59 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.கோடிக்கணக்கான இந்தியர்களின் எளிதான வாழ்க்கை, கண்ணியத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும்: பிரதமர்
June 10th, 09:54 am
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட முடிவு செய்திருப்பது, நமது நாட்டின் வீட்டுவசதித் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அனைத்து ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்வதை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியில் அனைவரும் பங்கேற்குமாறு பிரதமர் வலியுறுத்தல்
February 21st, 03:50 pm
சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.ஜவுளிக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெருமளவில் பயனடையும்
September 08th, 02:49 pm
‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜவுளிகள், மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகள்/ பொருட்களுக்கு ரூ. 10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம், ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகள் குறைப்பு திட்டம் மற்றும் இதர அரசு நடவடிக்கைகளுடன் (போட்டி தன்மையுடன் கூடிய விலையில் கச்சாப் பொருட்களை வழங்குதல், திறன் மேம்பாடு உள்ளிட்டவை) ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக ஜவுளி உற்பத்தியில் புதிய யுகம் ஏற்படும்.ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 08th, 02:49 pm
2022-23ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார சேவைப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை
September 06th, 11:01 am
பிரதம சேவகர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்ப உறுப்பினர் என்ற முறையில், இமாச்சலப்பிரதேசம் இன்று எனக்கு பெருமிதம் தேடித் தந்துள்ளது. சிறிய அளவிலான முன்னுரிமைகளுக்குக்கூட இமாச்சல பிரதேசம் போராடிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் தற்போது இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சியின் கதையை எழுதிக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். ஆண்டவனின் ஆசீர்வாதத்தாலும், இமாச்சல அரசின் விடாமுயற்சி மற்றும் இமாச்சல மக்களின் விழிப்புணர்வு காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. என்னுடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். குழுவாக செயல்பட்டதன் விளைவாக, இமாச்சலப்பிரதேசம் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! !இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
September 06th, 11:00 am
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.கொவிட்-19 நிலை குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமரின் உரை
July 16th, 12:07 pm
கொரோனாவிற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை நீங்கள் அனைவரும் முன் வைத்துள்ளீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விஷயம் குறித்து வட கிழக்கு மாகாணங்களின் மரியாதைக்குரிய முதலமைச்சர்கள் உடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றேன். குறிப்பாக நிலைமை மோசமாக உள்ள மாநிலங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.கொவிட் 19 நிலை குறித்து 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
July 16th, 12:06 pm
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொவிட் 19 சம்பந்தமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் அளித்ததற்காக முதலமைச்சர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்கள். தடுப்பூசித் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும், தங்களது மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினார்கள். தடுப்பூசித் திட்டத்தின் உத்தி பற்றிய தங்களது கருத்துக்களையும் அவர்கள் வழங்கினார்கள் .மாநில, மாவட்ட அதிகாரிகளுடனான பிரதமரின் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
May 20th, 11:40 am
Prime Minister Shri Narendra Modi interacted with the state and district officials on the COVID-19 situation through video conference.கொவிட்-19 தொற்றின் நிலவரம் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 20th, 11:39 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்றின் நிலவரம் குறித்து மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார்.கொவிட்-19 மேலாண்மை குறித்து மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 18th, 11:40 am
Prime Minister Modi through video conference interacted with field officials from States and Districts regarding their experience in handling the Covid-19 pandemic. During the interaction, the officials thanked the Prime Minister for leading the fight against the second wave of Covid from the front.நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ குழுவினருடன் கொவிட் நிலைமை குறித்து பிரதமர் உரையாடல்
May 18th, 11:39 am
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ குழுவினருடன் கொவிட் நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாடினார்.கொவிட் மற்றும் தடுப்பூசி சம்பந்தமான நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
May 15th, 02:42 pm
கொவிட் தொற்று, பரிசோதனை, பிராணவாயுவின் இருப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு, தடுப்பூசித் திட்டம் ஆகியவற்றின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிலைகளை அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 24th, 11:55 am
இந்த விழாவில் என்னுடன் கலந்து கொண்டுள்ள பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அரியானா,அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களே, அரியானா மாநில துணை முதலமைச்சர், மாநிலங்களின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர்களே, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களே, நாடு முழுவதிலும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களின் மக்கள் பிரதிநிதிகளே, இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 5 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக நரேந்திர சிங் சற்று முன்பு தெரிவித்தார். இந்த அளவுக்கு அதிகமான கிராமங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, கிராம வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளுக்கு வலிமையை அளித்துள்ளது. இந்த 5 கோடி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மரியாதை மிக்க வணக்கங்கள்.சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்து விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
April 24th, 11:54 am
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.