ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவின் இந்தியப் பயணம்
October 07th, 03:40 pm
இந்தியா-மாலத்தீவுகள் உடன்பாடு: விரிவான பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு தொலைநோக்கு.இந்தியா மற்றும் மாலத்தீவுகள்: விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு பார்வை
October 07th, 02:39 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு ஆகியோர், 2024 அக்டோபர் 7 அன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர், அதே நேரத்தில், இரு நாடுகளின் மக்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களித்த வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் சிறப்பு உறவை ஆழப்படுத்துவதில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம் (அக்டோபர் 7, 2024)
October 07th, 12:25 pm
இந்தியாவும், மாலத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம் மற்றும் படகுத்துறையை திறந்து வைக்கின்றனர்
February 27th, 06:42 pm
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் 2024 பிப்ரவரி 29 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து புதிய விமான ஓடுபாதை, செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை மற்றும் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைக்க உள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 13th, 11:19 pm
இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க! என்று சொல்கிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமரின் கலந்துரையாடல்
February 13th, 08:30 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வணக்கம் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் 7 அமீரகங்கள் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினரும், அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர்.Prime Minister’s meeting with President of the UAE
February 13th, 05:33 pm
Prime Minister Narendra Modi arrived in Abu Dhabi on an official visit to the UAE. In a special and warm gesture, he was received at the airport by the President of the UAE His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan, and thereafter, accorded a ceremonial welcome. The two leaders held one-on-one and delegation level talks. They reviewed the bilateral partnership and discussed new areas of cooperation.இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு.பி.ஐ சேவைகளைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 12th, 01:30 pm
மேதகு அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே, மேதகு பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் அவர்களே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, இலங்கை, மொரீஷியஸ் மற்றும் பாரத மத்திய வங்கிகளின் மதிப்புமிக்க ஆளுநர்களே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மதிப்பிற்குரியவர்களே அனைவருக்கும் வணக்கம்!மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 01:00 pm
இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை தொடங்கி வைக்க உள்ளனர்
February 11th, 03:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் 2024 பிப்ரவரி 12 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.புதுதில்லியில் நடைபெற்ற 21-வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 04th, 07:30 pm
நான் ஒரு தேர்தல் கூட்டத்தில் இருந்ததால் இங்கு வர சிறிது தாமதம் ஆகிவிட்டது. அதற்காக முதலாவதாக, உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். நான் இங்கு வரவேண்டும் என்பதற்காக விமான நிலையத்திலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன்.இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023 இல் பிரதமர் உரை
November 04th, 07:00 pm
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023க்கு தன்னை அழைத்ததற்காக ஹெச்.டி குழுமத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்த தலைமைத்துவ உச்சிமாநாட்டின் கருப்பொருள்களுடன் இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கான செய்தியை ஹெச்.டி குழுமம் எவ்வாறு எப்போதும் பரப்பி வருகிறது என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். 2014-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்தியாவை மறுவடிவமைத்தல்’ என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளை அவர் நினைவு கூர்ந்தார். மிகப்பெரிய மாற்றங்கள் வரவிருப்பதாகவும், இந்தியா மறுவடிவமைக்கப்படும் என்றும் குழு உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு இன்னும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நிறுவப்பட்டபோது ‘சிறந்த எதிர்காலத்திற்கான உரையாடல்கள்’ என்ற கருப்பொருள் வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். இப்போது 2023-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநாட்டின் கருப்பொருளான ‘தடைகளை உடைத்தல்’ மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசு அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெறும் என்ற அடிப்படை செய்தியையும் திரு மோடி எடுத்துரைத்தார். “2024 பொதுத் தேர்தல் முடிவுகள் தடைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” என்று திரு மோடி குறிப்பிட்டார்.17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 01st, 11:05 am
எனது அமைச்சரவை நண்பர் திரு அமித் ஷா அவர்களே, இந்திய தேசிய கூட்டுறவு சங்க தலைவர் திரு திலீப் சங்கானி அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டுள்ள கூட்டுறவு சங்க உறுப்பினர்களே, விவசாய சகோதர, சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
July 01st, 11:00 am
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் கருப்பொருள் ‘அமிர்த காலம்: துடிப்பான இந்தியாவின் வளங்களை கூட்டுறவின் மூலம் பெறுதல்’ என்பதாகும். கூட்டுறவு சந்தைப்படுத்தல், கூட்டுறவு விரிவாக்கம், ஆலோசனை சேவைகளுக்காக இணையவழி வர்த்தக இணையதளங்களின் ஆன்லைன் சேவைகளையும் பிரதமர் திரு.மோடி தொடங்கி வைத்தார்.நிதித்துறை குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 07th, 10:14 am
நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது. கொரோனா பெருந்தொற்றின் போது நிலவிய இந்தியாவின் நிதி மற்றும் நிதிசார் கொள்கையின் தாக்கங்களை தற்போது ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இது நிகழ்ந்தது. நிதி சீர்திருத்தம், வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி இந்தியா தற்போது முன்னேறுவதால் மிகப்பெரிய மாற்றத்தையும் நாம் சந்திக்கிறோம். விவாதங்களின் தொடக்கம் மற்றும் முடிவில் நிலவி வந்த கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தற்போது மாற்றாக விளங்குகின்றன. உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தது. இதில் அதிக முதலீடுகள் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டன.‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்' குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்’ குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணைய வழிக் கருத்தரங்குகள் தொடரில் இது பத்தாவதாகும்.Cabinet approves incentive scheme for promotion of RuPay Debit Cards and low-value BHIM UPI transactions
January 11th, 03:30 pm
The Union Cabinet, chaired by the Hon’ble Prime Minister Shri Narendra Modi, has approved the incentive scheme for promotion of RuPay Debit Cards and low-value BHIM-UPI transactions (person-to-merchant) for a period of one year from April 2022.We have given top priority to ensure that banking services reach the last mile: PM Modi
October 16th, 03:31 pm
PM Modi dedicated 75 Digital Banking Units (DBUs) across 75 districts to the nation via video conferencing. He said that the 75 DBUs will further financial inclusion and enhance banking experience for citizens. “DBU is a big step in the direction of Ease of Living for the common citizens”, he said.