உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரை

October 20th, 04:54 pm

மேடையில் அமர்ந்திருக்கும் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மதிப்பிற்குரிய ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு நாயுடு அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர்களே, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

October 20th, 04:15 pm

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இன்றைய திட்டங்களில் ரூ.6,100 கோடி மதிப்பிலான பல விமான நிலைய திட்டங்களும் வாரணாசியில் பல வளர்ச்சி முன்முயற்சிகளும் அடங்கும்.

பிரதமர் செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்

September 21st, 10:16 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 23 அன்று வாரணாசி செல்கிறார். அங்கு பிற்பகல் 1.30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார்.