பிரதமர் நரேந்திர மோடியும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனும் முக்கியத் தொழில் அதிபர்களுடனும், ஸ்வீடன் தலைமை நிர்வாகிகளுடனும் கலந்துரையாடுகின்றனர்.

April 17th, 05:52 pm

பிரதமர் நரேந்திர மோடி சுவீடனின் தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவர் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் வர்த்தக உறவு பற்றி விவாதித்தார். இந்தியாவில் முதலீடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் ஒரு மதிப்புமிக்க பங்குதாரர் என்று பிரதமர் மோடி விவரிக்கிறார்.

பிரதமர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டபோது (2018 ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

April 17th, 04:50 pm

இது எனது முதலாவது ஸ்வீடன் பயணமாகும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடனில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், மரியாதைக்கும் பிரதமர் திரு லாஃப்வென்னுக்கும், ஸ்வீடன் அரசுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தின் போது பிரதமர் திரு லோஃப்வென் இந்தியா உச்சிமாநாட்டிற்கு இதர நோர்டிக் நாடுகளுடன் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.