டி-20 உலக சாம்பியன் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் நிகழ்த்திய உரையாடலின் தமிழாக்கம்

டி-20 உலக சாம்பியன் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் நிகழ்த்திய உரையாடலின் தமிழாக்கம்

July 05th, 04:00 pm

நண்பர்களே, வருக! நாட்டை உற்சாகத்தாலும், கொண்டாட்டத்தாலும் நீங்கள் எவ்வாறு நிரப்பியிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நமது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நீங்கள் விஞ்சிவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! வழக்கமாக இரவு நேரத்தில் நான் அலுவலகத்தில் வெகுநேரம் பணியாற்றுகிறேன். ஆனால் இந்த நேரத்தில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்தது. எனது கோப்புகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நீங்கள் குறிப்பிடத்தக்க அணி உணர்வையும், திறமையையும், பொறுமையையும் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தீர்கள். எனவே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்

June 30th, 02:06 pm

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30-06-2024) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். போட்டியில் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறன்களையும் அவர்களது சிறந்த உணர்வையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.